சென்னை:ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 49 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் க்ரீன், இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர். க்ரீன் 6 ரன்களிலும், இஷான் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களம் இறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட்டானார்.
CSK vs MI: பவுலிங்கில் 'குட்டி மலிங்கா' அசத்தல்: சென்னை அணிக்கு 140 ரன்கள் இலக்கு! - சென்னை மும்பை அணிகள் மோதல்
ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை அணிக்கு 140 ரன்களை வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயித்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் வெளியேறினார். இதனால் மும்பை அணி 69 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. எனினும் நேஹல் வதேரா சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். 64 ரன்கள் எடுத்திருந்த போது, பதிரானா பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். ஸ்டப்ஸ் 20, டிம் டேவிட் 2, அர்ஷத் கான் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்தது. ஆர்ச்சர் 3, பியூஷ் சாவ்லா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
குட்டி மலிங்கா என வர்ணிக்கப்படும் சென்னை அணியின் மதீஷா பதிரானா சிறப்பாக பந்துவீசி அசத்தினார். 4 ஓவர்களில் 15 ரன்களை விட்டுக்கொடுத்த அவர் 3 விக்கெட்களை சாய்த்தார். தீபக் சாஹர், தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.