தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL FINAL: CSK vs GT - ஆட்டம் நடைபெறுவது சந்தேகம்... மீண்டும் மழை! - அகமதாபாத் நகரில் மழை

அகமதாபாத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதும் ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

Rain
Rain

By

Published : May 28, 2023, 7:30 PM IST

Updated : May 28, 2023, 9:47 PM IST

அகமதாபாத்:16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய தொடர் தற்போது கிளைமாக்ஸ் காட்சியை நெருங்கி உள்ளது. நடப்பு சீசனுக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முன்னேறி உள்ளன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று(மே. 28) இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. வழக்கம் போல் இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட வேண்டிய நிலையில், அகமதாபாத் நகரில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து ஆடுகளம் தரை விரிப்புகளால் மூடப்பட்டுள்ளது. இரு அணி ரசிகர்களும் மைதானத்தில் குவிந்துள்ள நிலையில், மழை தொடர்வதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை ஓய்ந்தால், ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால் அகமதாபாத்தில் மீண்டும் கொட்டி வருகிறது. மீண்டும் மைதானம் தார்பாய் கொண்டு மூடப்பட்டது. விட்டு விட்டு மழை கொட்டி வருவதால் ஆட்டம் தொடங்குமா அல்லது ரிசர்வ் டே முறைப்படி நாளை (மே. 29) நடைபெறுமா என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளது

இதையும் படிங்க: "இது தான் கடைசி போட்டி" ஓய்வை அறிவித்த சிஎஸ்கே வீரர்!

Last Updated : May 28, 2023, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details