டெல்லி:ஐபிஎல் தொடரின் 67வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே களம் இறங்கினர்.
இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். 50 பந்துகளை சந்தித்த அவர் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 79 ரன்களை குவித்தார். மேலும் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 141 ரன்களை சேர்த்தது.