ஹைதராபாத்:ஐபிஎல் 2023 போட்டிகள், கடந்த மே 31அன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் 2023இன் 25வது லீக் ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்று வரும் ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் களம் இறங்கியது.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெடுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் அரைசதம் கடந்து, 64 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதேநேரம், இஷான் கிஷான் 38, திலக் வர்மா 37, ரோகித் ஷர்மா 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதேபோல், டிம் டேவிட் 16 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதேநேரம், ஹைதராபாத் அணியின் மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், டி.நடராஜன் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து 193 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 48 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதேநேரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புரூக் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் தற்போது வரை 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து போராடி வருகிறது.