அகமதாபாத்: நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமன் சாஹா, சுப்மன் கில் ஜோடி முதலில் களமிறங்கினர். சாஹா வெறும் 4 ரன்னில் வெளியேற அடுத்து இணைந்த கில் – சாய் சுதர்சன் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர்.
சுப்பன் கில் 45 ரன்களில் அரை சத வாய்ப்பை இழந்து அவுட் ஆனார். பின்னர் சாய் சுதர்சன் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள் சேர்க்க அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லரும் சுப்பன் கில் வரிசையில் அரை சத வாய்ப்பை இழந்து 46 ரன்கள் எடுத்தார். பின்னர் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்தது.
ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி வீரர்கள் விளையாடத் தொடங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும், ஜோஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ராஜஸ்தான் அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தனர்.