தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2022: குஜராத்திற்கு எதிராக ஹைதராபாத் பந்துவீச்சு

ஐபிஎல் தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

ipl-2022-srh-win-toss-elect-to-bowl-against-gujarat
ipl-2022-srh-win-toss-elect-to-bowl-against-gujarat

By

Published : Apr 11, 2022, 7:45 PM IST

மும்பை:ஐபிஎல் தொடரின் 21ஆவது லீக் ஆட்டம் மாகாராஷ்டிராவின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று (ஏப். 11) நடக்கிறது. இந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதுகுறித்து வில்லியம்சன் கூறுகையில், "ஹைதராபாத் அணி இரண்டு மற்றும் மூன்றாவது போட்டியில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆட்டத்திலும் தொடரும்" என்றார்.

குஜராத் டைட்டன்ஸ்:மேத்யூ வேட்(கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன்(கீப்பர்), ஐடன் மார்க்ரம், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்.

இதையும் படிங்க:அஸ்வின், பாதியில் வெளியேறியது சரியான தருணம்- சங்கக்கரா

ABOUT THE AUTHOR

...view details