மும்பை : ஐபிஎல் தொடரில் இன்றிரவு நடைபெற்றுவரும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னோ டாஸ் வென்றது.
முன்னதாக, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன், “கடந்த முறையை போன்று முதலில் பேட்டிங் செய்ய உள்ளோம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
தொடர்ந்து டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல், “நாங்கள் முதலில் பவுலிங் வீச தேர்ந்தெடுத்தோம். இதற்கு எந்த காரணமும் கிடையாது. இலக்கை நோக்கி விளையாடுவது எளிதாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.
இந்நிலையில் முதலில் ஆடிய ராஜஸ்தான், தொடக்கம் முதலே நிதானமாக ஆடி 8 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. படிக்கல் (28) மற்றும் கேப்டன் சஞ்சு சாம்ஸன் (12) களத்தில் நின்றனர். ஜோஸ் பட்லர் 13 ரன்னில் அவுட் ஆனார். எனினும் அடுத்தடுத்த ஓவர்களில் படிக்கல் (29), சாம்ஸன் (13) நடையை கட்டினர்.