புனே: ஐபிஎல் சீசனின் 18ஆவது லீக் ஆட்டம் இன்று (ஏப். 9) எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர். இதற்கு முன்னதாக பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, "முந்தைய போட்டிகளைவிட இந்த போட்டியில் கூடுதலாக போராடுவோம். இனி வரும் அனைத்து போட்டிகளும் எங்களுக்கு முக்கியமான போட்டிகளாகும். முதல் வெற்றிக்காக காத்திருக்கிறோம்" என்றார்.