மும்பை:ஐபிஎல் தொடரின் 43ஆவது லீக் ஆட்டம் பிராபோர்ன் மைதானத்தில் நடக்கிறது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிவருகிறது.
முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 53 பந்துகளுக்கு 58 ரன்களை குவித்தார்.