மும்பை:நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு ஆகிய அணிகள் தகுதிபெற்றுவிட்டன. பிளே ஆஃப் சுற்று போட்டி நாளை (மே 24) முதல் தொடங்க உள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் நேற்று (மே 22) மோதின.
கேன் வில்லியம்சன் சொந்த காரணங்களுக்காக நியூசிலாந்து சென்ற நிலையில், நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி கேப்டனாக புவனேஷ்வர் குமார் செயல்பட்டார். சம்பர்தாய போட்டியாக பார்க்கப்பட்ட இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி, 158 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், லியம் லிவிங்ஸ்டனின் அதிரடியால் 15.1 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.