தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மாஸ் காட்டிய மொயின்... அதையெல்லாம் வீணாக்கிய அஸ்வின் - குவாலிஃபயரில் ஆர்ஆர்! - IPL 2022 Playoffs Teams

சென்னை அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில், அஸ்வினின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் சுற்றின் குவாலிஃபயர் - 1 போட்டியில் குஜராத் டைட்டன் அணியுடன் மோத உள்ளது.

CSK vs RR
CSK vs RR

By

Published : May 21, 2022, 8:04 AM IST

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று (மே 21) நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 151 ரன்களை ராஜஸ்தான் அணிக்கு இலக்காக நிர்ணயித்த நிலையில், 19.4 ஓவர்களில் அந்த அணி இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

சேஸ் செய்த ராஜஸ்தான்: சென்னை தொடரில் இருந்து வெளியேறினாலும், ராஜஸ்தான் அணி 2ஆம் இடத்திற்கு முன்னேற இதில் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மொயின் அலி 93 ரன்களை குவித்த நிலையில், சஹால், மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி பேட்டர்கள் பட்லர் 2, சாம்சன் 15, படிக்கல் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, ஓப்பனர் ஜெய்ஸ்வால் மட்டும் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.

அஸ்வின் அதிரடி: மேலும், 5ஆவது வீரராக ஹெட்மயர், ரியான் பராக் இறங்காமல் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்பட்டார். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அவர் 23 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி என 40 ரன்களை குவித்து, ராஜஸ்தான் அணியை குவாலிஃபயர் - 1 போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். குவாலிஃபயர் - 1 போட்டியில் குஜராத் அணியுடன் ராஜஸ்தான் அணி மோத உள்ளது. சென்னை பந்துவீச்சில் பிரசாந்த் சோலன்கி 2, சிரம்ஜித் சிங், மிட்செல் சான்ட்னர், மொயின் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மொயினின் கிளாஸிக் ஆட்டம்: முன்னதாக, சென்னை அணி பேட்டிங்கில் மொயின் அலி ராஜஸ்தான் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்து ரன்களை குவித்தார். போல்ட் வீசிய 6ஆவது ஓவரில் மட்டும் 5 பவுண்டரி, 1 சிக்ஸர் என 26 ரன்களை சேர்த்து மிரட்டினார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் பவர்பிளே ஓவர்கள் முடிவில் சென்னை 75 ரன்களை குவித்தது.

எனினும், பிற வீரர்கள் காட்டிய சுணக்கத்தால், அடுத்த 14 ஓவர்களில் வெறும் 75 ரன்களையே எடுத்த சென்னை, அதிரடி ஓப்பனிங் கிடைத்தும் சரியாக ஃபினிஷ் செய்யவில்லை. மொயின் அலி 57 பந்துகளில் 13 பவுண்டரி, 3 சிக்சர் என 93 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வுசெய்யப்பட்டார்.

இதையும் படிங்க: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன்

ABOUT THE AUTHOR

...view details