நவி மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகராஷ்டிராவில் உள்ள நான்கு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று (மார்ச் 30) ஆறாவது லீக் ஆட்டத்தில், ஃபாஃப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளேசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடிய கொல்கத்தா, இம்முறை டிம் சௌதியை களமிறக்கி, சிவம் மாவிக்கு ஓய்வளித்துள்ளது.
பிளேயிங் XI