மும்பை:ஐபிஎல் தொடரின் 56ஆவது லீக் ஆட்டம் நேற்று (மே 9) 7:30 மணிக்கு டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணி வீரர்கள் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 24 பந்துகளுக்கு 43 ரன்களையும், ரகானே 24 பந்துகளுக்கு 25 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதேபோல நிதிஷ் ரானா அதிரடியாக விளையாடி 26 பந்துகளுக்கு 43 ரன்களை குவித்தார். மறுப்புறம் பந்துவீச்சில் பும்ரா 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அந்த வகையில் 166 ரன்கள் வெற்றி இலக்குடன் மும்பை அணி வீரர்கள் களமிறங்கினர்.