மும்பை:ஐபிஎல் தொடரின் 47ஆவது லீக் ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதுகுறித்து ஸ்ரோயாஸ் ஐயர் கூறுகையில், நாங்கள் முதலில் பந்து வீசவே முடிவு செய்தோம். பனி காரணமாக,இரண்டாவது இன்னிங்ஸில் எங்களுக்கு உதவியாக இருக்கும். நாங்கள் கடினமாக ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளோம். இனி வரும் ஆட்டங்களில் நேர்மறையான பாதையில் செல்வோம்" என்றார்.