மும்பை:ஐபிஎல் தொடரின் 41ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு (ஏப்.28) 7:30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளிப்பட்டியலில், டெல்லி அணி 7 போட்டிகளில் 3 வெற்றிகள் 4 தோல்விகள் என்ற கணக்கில் 7ஆவது இடத்தில் உள்ளது.
மறுப்புறம்,கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகள் 5 தோல்விகள் என்ற கணக்கில் 8ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி-கொல்கத்தா அணிகள் 19ஆவது லீக் ஆட்டத்தில் மோதின. அதில், டெல்லி அணி வெற்றிபெற்றது. இரு அணிகள் உத்தேசப்பட்டியல் பின்வருமாறு.