மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 38ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. பஞ்சாப் அணி 188 ரன்களை சென்னைக்கு இலக்காக நிர்ணயித்தது. பஞ்சாப் பேட்டிங்கில் ஷிகர் தவான் - பனுகா ராஜபக்சே ஆகியோர் 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, அந்த அணியை வலுவான ஸ்கோர் நோக்கி கொண்டு சென்றனர். இதில், அதிகபட்சமாக தவாண் 88 (59) ரன்களை எடுத்தார். சென்னை சார்பில் டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ராயுடு 78: தொடர்ந்து, விளையாடிய சென்னை அணிக்கு ஓப்பனிங் நேற்றும் சரியாக அமையவில்லை. ராபின் உத்தப்பா 1 (7), மிட்சசெல் சான்ட்னர் 9 (15), சிவம் தூபே 8 (7) ஆகியோர் விரைவாக வெளியேறினர். நிதானமாக ஆடிவந்த கெய்க்வாட் 30 (27) அவுட்டானார். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில், ராயுடு அசராமல் ரன் குவித்து வந்தார்.
அரைசதம் கடந்து ஆடிவந்த அவர், 78 ரன்களில் ஆட்டமிழக்க சென்னை அணியின் நம்பிக்கை சற்று குறைய ஆரம்பித்தது. 24 பந்துகளில் 47 ரன்கள் தேவைபட்ட நிலையில், ஹர்ஷ்தீப் சிங், ரபாடா கூட்டணி முறையே 17ஆவது, 18ஆவது ஓவர்களில் தலா 6 ரன்களும், 19ஆவது ஓவரில் 8 ரன்கள் என 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தது. இதனால், கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது.