மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப். 23) மாலை நடைபெற்ற 35ஆவது லீக் தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீசியது.
ஹர்திக் அதிரடி: இதனைத் தொடர்ந்து, குஜராத் அணி 157 ரன்களை குஜராத் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. குஜராத் பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 67 (49) ரன்களை பதிவுசெய்தார். கொல்கத்தா சார்பில் ரஸ்ஸல் 4 விக்கெட்டுகளையும், சௌதி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
சொதப்பிய டாப் ஆர்டர்: 157 ரன்கள் என்ற சுமாரான இலக்குடன் களமிறங்கினாலும், கொல்கத்தா அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்தது. முதல் கட்ட பேட்டர்களான சாம் பில்லிங்ஸ், சுனில் நரைன், நிதீஷ் ராணா, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் வரிசையாக நடையைக் கட்டினர். மிடில் ஆர்டரில் ரின்கு சிங் 35 (28) ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 17 (17) ரன்களையும் எடுத்து ஆறுதல் அளித்தனர்.