மும்பை: ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ஹைதராபாத் அணிக்கு 152 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 60 ரன்களை எடுத்தார். மறுப்புறம் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சார் உம்ரான் மாலிக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
நிதான ஜோடி:இதனையடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது பேட்டிங்கைத் தொடங்கியது. கேப்டன் வில்லியம்சன் 3 (9) ரன்களில் பெவிலியன் திரும்ப, மற்றொரு ஓப்பனர் அபிஷேக் சர்மா உடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, முதலில் நிதானமாகவே ஆடியதால், பவர்பிளே முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 39 ரன்களை அணி எடுத்தது.
அதிரடி ஜோடி: இந்த இணையை ராகுல் சஹார் பிரித்தார். அவர் வீசிய 9ஆவது ஓவரில் அபிஷேக் 31 (25) ரன்களுக்கும், 11ஆவது ஓவரில் திரிபாதி 34 (22) ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து, ஜோடி சேர்ந்த மார்க்ரம் - பூரன் ஆகியோர் கடைசி வரை தங்களின் விக்கெட்டை பறிக்கொடுக்காமல் நின்று விளையாடினர்.