மும்பை:ஐபிஎல் தொடரில் இன்று (ஏப். 17) நடந்துவரும் 27ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிவருகின்றன. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு சுமாரான தொடக்கமே அமைந்தது. ஷிகர் தவான் 11 பந்துகளுக்கு 8 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 11 பந்துகளில் 14 ரன்களிலும் விரைவாக ஆட்டமிழக்க, பவர் பிளே முடிவில், பஞ்சாப் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 48 ரன்களை மட்டும் எடுத்தது. அதனை தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் 10 பந்துகளுக்கு 12 ரன்களுடனும், ஜிதேஷ் சர்மா 8 பந்துகளுக்கு 11 ரன்களுடனும் வெளியேறினர்.
5ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப்:ஐந்தாவது விக்கெட்டுக்கு லியம் லிவிங்ஸ்டன் - தமிழ்நாடு வீரர் ஷாருக் கான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். ஷாருக் நிதானம் காட்ட, லியம் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். லிவிங்ஸ்டன் அரைசதம் கடந்த நிலையில், ஷாருக் கான் 28 பந்துகளில் 2 சிக்சர்கள், 1 பவுண்டரி உள்பட 26 ரன்களை எடுத்தார்.