மும்பை:ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் ஆட்டம் நேற்றிரவு (ஏப். 16) 7:30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பெங்களூரு அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்களான ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்) 11ஆவது பந்திலும், அனுஜ் ராவத் முதல் பந்திலும் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி 12 ரன்களில் ரன் அவுட் ஆனார். மறுபுறம் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 34 பந்துகளுக்கு 55 ரன்களை எடுத்தார். அதேபோல, தினேஷ் கார்த்திக் 34 பந்துகளுக்கு 66 ரன்களை குவித்து அணிக்கு பக்கபலமாக இருந்தார்.
அந்த வகையில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர்.
இதையும் படிங்க:PBKS vs SRH: அகர்வாலுக்கு காயம்... ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு...