மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாராஷ்டிராவில் நடந்துவருகிறது. இன்று, (ஏப். 9) 17ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. முதலில் டாஸ்வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்ட இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக மொயீன் அலி 35 பந்துகளுக்கு 48 ரன்களை எடுத்தார். இதையடுத்து அம்பதி ராயுடு 27 பந்துகளுக்கு 27 ரன்களை எடுத்தார். கேப்டன் ரவீந்திர ஜடேஜா 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.