சென்னை: மோசமான பேட்டிங் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐபிஎல் தொடரின் 9ஆவது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசரஸ் இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற மும்பை அணி முதல் பேட்டிங் செய்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குவெய்டன் டீ காக் 40, பொல்லார்டு 35, ரோஹித் ஷர்மா 32 ரண்களை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி தொடக்க பேட்ஸ்மேன்கள் வார்னர், பேர்ஸ்ட்ரோ சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய பேர்ஸ்ட்ரோ பவுண்டரி, சிக்ஸர் மழை பொழிந்தார். 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து க்ருணால் பாண்ட்யா பந்தில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானர்.
மறுமுனையில் நிதானம், அதிரடி என கலந்து ஆடி வந்த வார்னர் 36 ரன்கள் எடுத்தபோத எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.
ஏற்கனவே சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாமல் சன் ரைசர்ஸ் அணி தவித்து வந்த நிலையில், இன்றைய போட்டியிலும் முதல் இரண்டு விக்கெட்களுக்குப் பிறகு களமிறங்கிய பேட்மேன்களான மனிஷ் பாண்டே, விராத் சிங், அபிஷேக் ஷர்மா பெரிய அளவில் சோபிக்காமல் பெவிலியனுக்கு நடையை கட்டினர்.