தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021 QUALIFIER 1: டாஸ் வென்றார் தோனி; டெல்லி பேட்டிங் - CHENNAI SUPER KINGS

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

IPL 2021 QUALIFIER 1
IPL 2021 QUALIFIER 1

By

Published : Oct 10, 2021, 7:28 PM IST

துபாய்:ஐபிஎல் 2021 சீசன் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பாதியில் ரத்துசெய்யப்பட்ட நிலையில், இத்தொடரின் இரண்டாம் கட்டப்போட்டிகள் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினம் (அக். 8) நிறைவடைந்த நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் தகுதிபெற்றன.

ரிஷப் vs தோனி

இந்நிலையில், பிளே-ஆஃப் சுற்றின் முதல் குவாலிஃபயர் போட்டியில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், டெல்லி அணியில் ரிபல் படேலுக்கு பதிலாக டாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிளேயிங் XI

டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சிம்ரோன் ஹெட்மையர், அக்சர் பட்டேல், டாம் கரன், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அன்ரிச் நோர்க்கியா.

சென்னை சூப்பர் கிங்ஸ்:எம்.எஸ். தோனி (கேப்டன்), ஃபாப் டூ ப்ளேசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹசில்வுட்.

இதையும் படிங்க: உலக மல்யுத்த சாம்பியன் ஷிப்: வெள்ளி வென்று புதிய வரலாறு படைத்த அன்ஷு மாலிக்

ABOUT THE AUTHOR

...view details