தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021 DC vs PBKS: மயாங்க், ராகுலின் அதிரடியில் பஞ்சாப் 195 ரன்கள் குவிப்பு! - Innings score

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி 196 ரன்கள் குவித்தது.

IPL 2021 DC vs PBKS: மயாங்க், ராகுலின் அதிரடியில் பஞ்சாப் 195 ரன்கள் குவிப்பு!
IPL 2021 DC vs PBKS: மயாங்க், ராகுலின் அதிரடியில் பஞ்சாப் 195 ரன்கள் குவிப்பு!

By

Published : Apr 18, 2021, 10:47 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 11ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆடடக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் - மயாங்க் அகர்வால் மிரட்டலான தொடக்கத்தை அளித்தனர். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினர். மயாங்க் தான் சந்தித்த 25 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார்

10ஆவது ஓவரில் இந்த இணை 100 ரன்களை கடந்தது. இந்த ஜோடியை அறிமுக வீரர் மெரிவாலா பிரித்தார். மயாங்க் அகர்வால் 69 (36) ரன்களில் தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4 சிக்சர், 7 பவுண்டரிகளையும் மயாங்க் விளாசினார்.

இதையடுத்து 15ஆவது ஓவரில் ராகுல் வி்க்கெட்டை ராபாடா எடுத்து டெல்லி அணிக்கு ஆறுதல் அளித்தார்.

அடுத்து வந்த வீரர்களும் தோள்கொடுக்க பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது.

பஞ்சாப் கிங்ஸ் சார்பில் ஷாருக் கான் 15 ரன்களிலும், தீபக் ஹூடா 22 ரன்களிலும் ஆட்டமிழக்கமால் இருந்தனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் தரப்பில் கிறிஸ் வோக்ஸ், மெரிவாலா, ரபாடா, ஆவேஷ் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையும் படிங்க:IPL 2021 RCB vs KKR: அட்டகாசமான பந்துவீச்சால் பெங்களூரு ஹாட்ரிக் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details