ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரின் ஒன்பதாவது லீக் ஆட்டம், சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. முதல் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியைச் சந்தித்த மும்பை அணி, இரண்டாவது போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது.