ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இன்று (ஏப்.15) நடைபெறும் ஏழாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச தீர்மானித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்தே விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் இடம்பெற்றுள்ளார். ஸ்ரேயஸ் கோபாலுக்கு பதிலாக உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி அணி தரப்பில் அமித் மிஸ்ரா, ஹெட்மயர் நீக்கப்பட்டு ரபாடா, லலித் யாதவ் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளனர்.
ராஐஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), மனன் வோரா, ஜோஸ் பட்லர், ரியான் பராக், டேவிட் மில்லர், சிவம் தூபே, ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், முஷ்தபிஷூர் ரஹ்மான், சேதன் சக்காரியா, ஜெயதேவ் உனத்கட்
டெல்லி கேபிடல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகர் தவான், பிருத்வி ஷா, கிறிஸ் வோக்ஸ், ஸ்டாய்னிஸ், அஜிங்கயா ரஹானே, லலித் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், டாம் கரன்
இதுவரை இரு அணிகளும் 22 போட்டிகளில் மோதி, 11 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 11 போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளன.