தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021 RR vs DC: டெல்லி கேபிடல்ஸ் அணி 147/8 ; ரிஷப் பண்ட் ஆறுதல்

இன்றைய ஐபிஎல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

RR VS DC FIRST INNINGS
RR VS DC FIRST INNINGS

By

Published : Apr 15, 2021, 9:54 PM IST

ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது.

இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜெயதேவ் உனத்கட் தொடக்க ஓவர்களை சிறப்பாக வீசினார். அதனால் பிருத்வி ஷா 2 (5) ரன்களிலும், ஷிகார் தவான் 9 (11) ரன்களிலும், ராஹானே 8 (8) ரன்களிலும் அடுத்தடுத்து உனத்கட்டிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

அடுத்து இறங்கிய ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமல் முஸ்தாபிஷூர் ரஹ்மான் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, டெல்லி அணி 37 ரன்களில் 4 விக்கெட் எடுத்து தத்தளித்தது.

கேப்டன் ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி, 30 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். இருப்பினும் அடுத்து அவர் சந்தித்த இரண்டாவது பந்திலேயே வீணாக ஓடி ரன்அவுட் ஆனார்.

அவர் வெளியேறிய பின், மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்காததால், டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை சேர்த்தது.

டெல்லி அணி அடித்த 20 பவுண்டரிகளில், 9 பவுண்டரிகள் ரிஷப் பண்ட் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் தரப்பில் ஜெயதேவ் உனத்கட் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, நேர்த்தியாக பந்துவீசினார்.

ABOUT THE AUTHOR

...view details