சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய பணித்துள்ளது.
பெங்களூரு அணியில் ரஜத் பாட்டீதர் நீக்கப்பட்டு தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் அணியில் முகமது நபி, சந்தீப் சர்மா நீக்கப்பட்டு ஜேசன் ஹோல்டர், ஷபாஸ் நதீம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), விருத்திமான் சஹா, ஜானி பேர்ஸ்டோவ், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், ஜேசன் ஹோல்டர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், ஷபாஸ் நதீம், ரஷீத் கான், அப்துல் சமத்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன், யஷ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், சபாஷ் அகமது, கைல் ஜேமீசன்.
இதையும் படிங்க:IPL 2021 SRH vs RCB : வெற்றிநடையைத் தொடருமா கோலியின் படை?