தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021 SRH vs RCB: பெங்களூரு தடுமாற்றம்; மேக்ஸ்வெல் அரை சதத்தால் 149 ரன்கள் குவிப்பு!

இன்றைய சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஹைதராபாத் அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

virat kohli, maxwell, IPL 2021
ipl-2021-match-6-srh-vs-rcb-first-innings

By

Published : Apr 14, 2021, 9:33 PM IST

சென்னை: ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 11 (13) ரன்களிலும், ஷபாஸ் அகமது 14 (10) ரன்களிலும் ஆட்டமிந்தனர்.

அணியின் தூண்களான விராட் கோலி 33 (29) ரன்னிலும், டிவில்லியர்ஸ் 1(5) ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். கடைசிநேரத்தில் அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் சற்று அதிரடி காட்டியதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 (41) ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஷித் கான் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ABOUT THE AUTHOR

...view details