சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐந்தாவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பந்து வீச முடிவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குயின்டன் டி காக், ரோஹித் சர்மா களமிறங்கினர். பவர்-பிளேயில் அதிரடிக்கு பெயர்போன டி காக் 2 (6) ரன்களில், வருண் சக்கரவர்த்தியின் சுழலில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அதைத்தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் களமிறங்கி, ஹர்பஜன் வீசிய மூன்றாம் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி எதிரணியை மிரளவைத்தார்.
ரோஹித் சற்று நிதானம் காட்ட, சூர்யகுமார் 33 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் ஷகிப் அல் ஹசான் பந்தை தூக்கி அடித்து, சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.