துபாய்: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது.
வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
இதையடுத்து, இரண்டாம் கட்டப் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 39ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இன்று (செப். 26) மோதுகிறது.
பெங்களூரு அணியில் 3 மாற்றங்கள்
இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி, பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. பெங்களூரு அணி சைனி, ஹசரங்கா, டிம் டேவிட் ஆகியோர் ஷாபாஸ் அகமது, டேன் கிறிஸ்டேன், ஜேமீசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் சௌரப் திவாரி நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா இணைந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்:குவின்டன் டி காக், ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சஹார், டிரன்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), ஏபி டி வில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், தேவ்தத் படிக்கல், கேஎஸ் பாரத், ஷாபாஸ் அகமது, யஷ்வேந்திர சஹால், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், டேன் கிறிஸ்டேன், கைல் ஜேமிசன்.
இதையும் படிங்க: IPL 2021: கொல்கத்தா 171 குவிப்பு; சேஸ் செய்யுமா சென்னை?