சென்னை: ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இன்று (ஏப்.17) நடைபெறும் ஒன்பதாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்அணியை எதிர்கொள்கிறது.
சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
மும்பை தரப்பில் ஜேன்சன் நீக்கப்பட்டு ஆடம் மில்னே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் அணி நான்கு மாற்றங்களைச் செய்துள்ளது. சாஹா, ஹோல்டர், நதீம், நடராஜன் ஆகியோர் நீக்கப்பட்டு விராத் சிங், அபிஷேக் சர்மா, முஜிப் உர் ரஹ்மான், கலீல் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, கைரன் பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், ராகுல் சாஹர், ஆடம் மில்னே
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், மனீஷ் பாண்டே, விராத் சிங், விஜய் சங்கர், அப்துல் சமத், அபிஷேக் சர்மா, புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், கலீல் அகமது, முஜிப் உர் ரஹ்மான்