தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021 கிங்ஸ் vs சூப்பர் கிங்ஸ்: வான்கடேவில் வாணவேடிக்கை காட்டப்போவது யார்? - PBKS vs CSK MATCH PREVIEW

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி ரசிகர்களின்றி சென்னையில் தொடங்கியது. சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி இன்று மாலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

MS DHONI, KL RAHUL
IPL 2021 LEAGUE 8 PBKS vs CSK MATCH PREVIEW

By

Published : Apr 16, 2021, 6:11 AM IST

Updated : Apr 16, 2021, 3:55 PM IST

ஐபிஎல் தொடரின் எட்டவாது லீக் ஆட்டமான, சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ்அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற இருக்கின்றது.

கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் (அ) டேவிட் மாலன், ஷாருக் கான் இந்தப் பேட்டிங் வரிசைதான் இன்றையப் போட்டியில் சென்னை அணியின் முதல் பிரச்சினை.

முதல் ஆறு ஓவர்களான பவர்-பிளேயில் விக்கெட் வீழ்த்த சிரமப்பட்டுவரும் சென்னை, இந்தப் போட்டியில் ஜேசன் அல்லது இங்கிடியைக் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணியுடனான கடந்த போட்டியில் சிஎஸ்கே பேட்டிங்கில் மோசமான தொடக்கத்தைத்தான் அளித்தது. இப்படி பவர்-பிளேயில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாகச் செயல்படாவிட்டால் சென்னை அணியின் தற்போதைய நிலைமையில் எந்த மாற்றமும் இருக்காது.

ஒரு போட்டியை வைத்து மட்டும் அணியின் நிறைகுறைகளைக் கணக்கிட முடியாது என்றாலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல்-2020 தொடரிலும் சென்னை அணி தனது அனைத்துப் பிரிவுகளிலும் பல ஓட்டைகள் வைத்திருந்தது.

அதனால்தான் சிஎஸ்கேவுக்கு மிகவும் மோசமான தொடராக அது அமைந்தது. இப்போதும் அந்த ஓட்டைகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்குக்கூட, ஒரு சிரத்தையான ஆட்டத்தை சென்னை அணி வீரர்கள் வெளிப்படுத்தவில்லை என்றால் இந்தத் தொடரிலும் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியே இருக்க நேரிடும்.

மும்பை வான்கடே ஆடுகளம், என்னதான் பேட்டிங்கிற்கு ஒத்துழைப்பதாக இருந்தாலும் விக்கெட் டேக்கிங் ஸிப்பினர்கள் சென்னை அணிக்கு நிச்சயம் தேவை. கிருஷ்ணப்பா கவுதம் (அ) சாய் கிஷோர், இம்ரான் தாஹிர் ஆகியோரை அணியில் சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.

பஞ்சாப் அணி தனது உறுதியான பேட்டிங் மூலம் எதிரணியை மிரட்டினாலும், அதன் பந்துவீச்சு என்பது 221 ரன்களையே எளிதில் விட்டுக்கொடுக்கும் அளவிற்குதான் இருந்துவருகிறது. டி20 போட்டிகளில் வாணவேடிக்கைக் காட்டும் பேட்ஸ்மேன்கள்தான் முக்கியம் என்று கூறப்பட்டலும், பந்துவீச்சும் ஒரு போட்டிக்கு எவ்வளவு முக்கியம் என்பதற்கான சான்று பஞ்சாப் அணிதான். அதிரடியான வேகப்பந்துவீச்சாளர்களால் மட்டுமே பஞ்சாப் அணிக்கு விடிவுகாலம்.

ரெய்னாவின் வருகைதான் சென்னை அணியை மிடில் ஓவர்களில் எழுச்சிபெற வைத்துள்ளது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நல்ல தொடக்கத்தை சென்னை வீரர்கள் அமைப்பார்களேயானால் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Last Updated : Apr 16, 2021, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details