துபாய்: கரோனா காரணமாக பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம்கட்டப் போட்டிகள் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின.
இந்நிலையில், 50ஆவது லீக் ஆட்டத்தில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இன்று (அக். 4) மோதுகிறது.
திணறல்
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதன்படி, சென்னை அணியில் ருதுராஜ், டூ ப்ளேசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்களில் இந்த இணை 26 ரன்களை எடுத்தது. ஆனால், மூன்றாவது ஓவரில் டூ பிளேசிஸ் 10 (8) ரன்களுக்கும், ஐந்தாவது ஓவரில் ருதுராஜ் 13 (13) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
தோனி - ராயுடு ஜோடி
பவர்பிளே முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களை எடுத்தது. அக்ஸர் படேல் வீசிய எட்டாவது ஓவரில் மொயின் அலி 5 (8) ரன்களிலும், அஸ்வினின் அடுத்த ஓவரில் உத்தப்பா 19 (19) ரன்களிலும் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.
இதன்பின்னர், அம்பத்தி ராயுடு உடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். அப்போது, சென்னை 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது.