சார்ஜா: கரோனா காரணமாக பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம்கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின. இத்தொடரின், இன்று (அக். 2) இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், 46ஆவது லீக் ஆட்டத்தில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.
சார்ஜாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
மும்பை அணியில் ராகுல் சஹார் நீக்கப்பட்டு ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி தரப்பில் லலித் யாதவுக்குப் பதிலாக பிருத்வா ஷாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: குவின்டன் டி காக், ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், சௌரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்னால் பாண்டியா, நாதன் கவுல்டைர்-நைல், ஜெயந்த் யாதவ், டிரன்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா
டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், ஸ்டீவ் ஸ்மித், சிம்ரோன் ஹெட்மையர், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அன்ரிச் நோர்க்கியா.
இதையும் படிங்க: அக். 8இல் ராமோஜி ஃபிலிம் சிட்டி திறப்பு: இது உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரம்!