சார்ஜா:'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
அதன்படி இரண்டாம் கட்ட போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 41ஆவது லீக் ஆட்டத்தில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இன்று (செப். 28) மோதுகிறது.
டெல்லியில் ஸ்டீவ் ஸ்மித்
இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியில் ரஸ்ஸல், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு பதிலாக டிம் சவுத்தி, சந்தீப் வாரியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி தரப்பில் காயம் காரணமாக பிருத்வி ஷாவுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இயான் மோர்கன் (கேப்டன்), சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், டிம் சவுத்தி, பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர்
டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், ஸ்டீவ் ஸ்மித், சிம்ரோன் ஹெட்மையர், லலித் யாதவ், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அன்ரிச் நோர்க்கியா.
இதையும் படிங்க: IPL 2021: ராய், வில்லியம்சன் அரைசதத்தால் விடியல் பெற்றது சன்ரைசர்ஸ்!