தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021: டாஸ் வென்றார் வில்லியம்சன்; டெல்லி பந்துவீச்சு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

டாஸ் வென்றார் வில்லியம்சன்
டாஸ் வென்றார் வில்லியம்சன்

By

Published : Sep 22, 2021, 7:35 PM IST

துபாய்:'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது.

பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

இதையடுத்து, இரண்டாம் கட்டப்போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 33ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இன்று (செப். 22) மோதுகிறது.

விளையாடும் ரஷித் கான்

இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா என எதிர்பார்க்கப்பட்ட ஆப்கன் வீரர் ரஷித் கான் இன்றைய போட்டியில் விளையாடுகிறார்.

முன்னதாக, ஹைதராபாத் அணியின் இடக்கை வேகப்பந்துவீச்சாளர் நடராஜனுக்கு இன்று (செப். 22) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஜசான் ஹோல்டர், அப்துல் சமத், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது.

டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், பிருத்வி ஷா, சிம்ரோன் ஹெட்மையர், ஸ்டாய்னிஸ், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அன்ரிச் நோர்க்கியா.

இதையும் படிங்க: எனக்கு சர்ப்ரைஸாக இல்லை - நடராஜன் ஓபன் டாக்

ABOUT THE AUTHOR

...view details