தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021 DC vs KKR: டெல்லி அணிக்கு கொல்கத்தா 155 ரன்கள் இலக்கு! - Lalit Yadav

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா அணி 154 ரன்களை எடுத்துள்ளது.

Avesh Khan Andre Russell
IPL 2021: Delhi Capitals restrict KKR to 154/6 in 20 overs

By

Published : Apr 29, 2021, 10:12 PM IST

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 25ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை டெல்லி அணி கேப்டன் ரிஷப் தேர்வு செய்தார்.

இதன்படி டெல்லி அணியின் இஷாந்த் சர்மா, ககிசோ ரபாடா கூட்டணி முதல் மூன்று ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசியது. நான்காவது ஓவரை வீச வந்த அக்சர் பட்டேல், நிதீஷ் ராணாவை 15(12) ரன்களில் வெளியேற்றினார்.

ஒன்பதாவது ஓவரில் ஸ்டோய்னிஸ், ராகுல் திரிபாதியின் விக்கெட்டை கைப்பற்ற, அவர் 19(17) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்த 11ஆவது ஓவரின் போது, கடந்த போட்டியில் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் மோர்கன், சுனில் நரைன் இருவரையும் டக்-அவுட்டாக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பேட்டிங் முனையில் தொடக்கம் முதலே ஆசுவாசுமாக ஆடிவந்த சுப்மன் கில்-ஐ 43(38) ரன்களில் ஆவேஷ் கான் தூக்கினார். அக்சர் பட்டேல் தன் பங்கிற்கு தினேஷ் கார்த்திக்கை 14(10) ரன்களில் அவுட்டாக்கினார். அனைத்து பேட்ஸ்மேன்களையும் கட்டுப்படுத்திய டெல்லி பவுலர்கள், ரஸ்ஸலுக்கு மட்டும் 27 பந்துகளில் 45 ரன்கள் கொடுத்துள்ளனர்.

இதனால் டெல்லி கேப்படல்ஸ் அணி 20 ஓவர்களை முழுமையாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 154 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தது. இதில் 7 ரன்கள் உதிரிகள்.

டெல்லி அணி தரப்பில் அக்சர் பட்டேல், லலித் யாதவ் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரஸ்ஸல் 45 ரன்களும், கில் 43 ரன்களும் அடித்தனர்.

இதையும் படிங்க: IPL 2021 RR VS MI: ராஜஸ்தானை வீழ்த்தி ஃபார்முக்கு திரும்பிய மும்பை; டி காக் அரைசதம்

ABOUT THE AUTHOR

...view details