டெல்லி: ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று (ஏப்.29) மோதுகின்றன. இப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ராஜஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றம் செய்யப்படவில்லை, மும்பை இந்தியன்ஸ் தரப்பில் இஷான் கிஷன் நீக்கப்பட்டு நாதன் கவுல்டர் நைல் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ரியான் பராக், டேவிட் மில்லர், சிவம் தூபே, ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், முஷ்தபிஷூர் ரஹ்மான், சேதன் சக்காரியா, ஜெயதேவ் உனத்கட்.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, கைரன் பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், ராகுல் சாஹர், ஜெயந்த யாதவ், நாதன் கவுல்டர் நைல்
இதையும் படிங்க: TNPL 2021: கரோனா விதிகளைப் பின்பற்றி தொடர் நடத்த அனுமதி