டெல்லி: ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ராஜஸ்தான் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். இந்த தொடரில் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த ராஜஸ்தான் அணியின் தொடக்கம் இப்போட்டியில் நன்றாக அமைந்தது. இருவரும் பலம் வாய்ந்த மும்பை பவுலிங்கை வெகு சிறப்பாக கையாண்டு, பவர்பிளே முடிவில் 47 ரன்களை குவித்தனர்.
செட்டிலாகி ஆடிவந்த டி காக் 41(32) ரன்களில் ராகுல் சஹாரிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 32(20) ரன்களில் ராகுல் சஹாரிடமே வீழ்ந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சிவம் டூபேவும், கேப்டன் சஞ்சு சாம்சனும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஜெயந்த யாதவ் வீசிய 15ஆவது ஓவரில் 13 ரன்களும், போல்ட் வீசிய 16ஆவது ஓவரில் 14 ரன்களும் குவித்து ஆச்சரியப்படுத்தியது.