அகமதாபாத்:ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டியானது அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அஸ்வினுக்குப் பதிலாக இஷாந்த் சர்மா விளையாடவுள்ளார். பெங்களூரு சார்பில் டான் கிறிஸ்டியன், சைனி நீக்கப்பட்டு ராஜத் பட்டிதர், டேனியல் சாம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.