ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஓரளவுக்குத் தாக்குபிடித்தனர். ஆவேஷ் கான் பந்துவீச்சில் விராட் கோலி 12(11) ரன்களிலும், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் தேவ்தத் படிக்கல் 17 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து, ராஜத் பட்டீதர் நிதானமாக ஆட, மேக்ஸ்வெல் சற்று அதிரடி காட்டினார். 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 20 பந்துகளில் 25 ரன்களில் அமித் மிஸ்ராவிடம் வீழ்ந்தார்.
அதன்பின்னர் களம்கண்ட டிவில்லியர்ஸ் ராஜத் பட்டிதர் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 54 ரன்களை எடுத்து ஆறுதளித்தது. அக்சர் பட்டேல் வீசிய 15ஆவது ஓவரில் ராஜத் பட்டீதர் 31(22) ரன்களில் அவுட்டானார்.