அகமதாபாத்:ஐபிஎல் தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்கவீரர்களாக கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். பொறுமையாக ஆடி வந்த ராகுல், பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் 19(20) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் கிறிஸ் கெயில் ரன் ஏதும் எடுக்காமலும், தீபக் ஹூடா 1(4) ரன்னிலும் வெளியேறினார்கள்.
மறுமுனையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயாங்க் அகர்வால் 31(34) ரன்களிலும், ஹென்ரிக்ஸ் 2(3) ரன்களிலும் நரைன் சுழலில் வீழ்ந்தனர். இந்த தொடரில் தொடர்ந்து சோபிக்காமல் இருந்த பூரன், இப்போட்டியில் 19(19) ரன்களில் வருணிடம் தனது விக்கெட்டை இழந்தார்.