தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021 SRH vs DC: ஹைதராபாத் அணிக்கு 160 ரன்களை இலக்கு! - DC

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 20 ஓவர்களில் 159 ரன்களை எடுத்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ்
ஹைதராபாத் அணிக்கு 160 ரன்களை இலக்கு

By

Published : Apr 25, 2021, 9:53 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், பிருத்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் டெல்லி அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர். பிருத்வி ஷா ஆக்ரோஷமாக விளையாட மறுமுனையில் தவான் நிதனாம் காட்டினார். இதனால் டெல்லி அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து ஆடிய பிருத்வி ஷா, சந்தித்த 35ஆவது பந்தில் அவரின் அரைசதத்தை பதிவு செய்தார். ஷிகர் தவான் 28(26) ரன்கள் எடுத்திருந்தபோது ரஷித் கான் பந்துவீச்சில் போல்டானார். அதற்கு அடுத்த ஓவரிலேயே பிருத்வி ஷாவும் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

அதன்பின் ஸ்டீவ் ஸ்மித், கேப்டன் பந்த் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். சித்தார்த் கவுல் வீசிய 19ஆவது ஓவரில் பந்த் 37(27) ரன்களிலும், ஹெட்மயர் 1(2) ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் 14 ரன்களை சேர்த்த டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 159 ரன்களை குவித்து 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.

டெல்லி அணி தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 34(25) ரன்களிலும், ஸ்டாய்னிஸ் 2(2) ரன்களிலும் ஆட்டமிழக்கமால் இருந்தனர்.

ஹைதராபாத் அணியில் சித்தார்த் கவுல் இரண்டு விக்கெட்டுகளையும், ரஷித் கான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: IPL 2021 CSK vs RCB: ஆர்சிபியை சம்பவம் செய்த சிஎஸ்கே!

ABOUT THE AUTHOR

...view details