மும்பை: ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூரு அணியை முதலில் பந்துவீச அழைத்துள்ளார்.
சென்னை அணியை பொறுத்தவரை மொயின் அலி, லுங்கி இங்கிடி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ப்ராவோ, தாஹிருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு அணியில் ரிச்சட்சன், ஷாபாஸ் அகமது நீக்கப்பட்டு சைனி, கிறிஸ்டியன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.