மும்பை:ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி கொல்கத்தா தொடக்க வீரர்களாக கில், ராணா ஆகியோர் களமிறங்கினர். கில் 11(19) ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, ராணா 22(25) ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இறங்கிய சுனில் நரைன் 6(7) ரன்களிலும், மோர்கன் ஒரு பந்தினைக் கூட சந்திக்காமல் ரன் அவுட்டாகியும் பெவிலியன் திரும்பினர்.
மறுமுனையில் மிகப்பொறுமையாக விளையாடிவந்த திரிபாதி 36(26) ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய ரஸ்ஸல் 9(7) ரன்களிலும், சற்றுநேரம் தாக்கு பிடித்த தினேஷ் கார்த்திக் 25(24) ரன்களிலும் மோரிஸிடம் வீழ்ந்தனர்.