மும்பை: ஐபிஎல் தொடரின் 16ஆவது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று (ஏப்.22) மோதுகின்றன. இப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, ராஜஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
பெங்களூரு அணியில் ராஜத் பட்டிதர் நீக்கப்பட்டு கேன் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் தரப்பில் ஜெயதேவ் உனத்கட் நீக்கப்பட்டு ஸ்ரேயஸ் கோபால் இன்று விளையாடுகிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர், யஷ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், சபாஷ் அகமது, கைல் ஜேமீசன்,கேன் ரிச்சர்ட்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), மனன் வோரா, ஜோஸ் பட்லர், ரியான் பராக், டேவிட் மில்லர், சிவம் தூபே, ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், முஷ்தபிஷூர் ரஹ்மான், சேதன் சக்காரியா, ஸ்ரேயஸ் கோபால்.
இதையும் படிங்க: IPL 2021 RCB vs RR: சீறிவரும் பெங்களூரை சிதறடிக்குமா ராஜஸ்தான்?