மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா தரப்பில் ஷாகிப் அல் ஹாசன், ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு சுனில் நரைன், நாகர்கோட்டி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை அணி தரப்பில் நட்சத்திர வீரர் ப்ராவோவுக்கு ஓய்வளிக்கப்பட்டு வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இயான் மோர்கன் (கேப்டன்), சுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி, கமலேஷ் நாகர்கோட்டி, பிரசித் கிருஷ்ணா, பாட் கம்மின்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஃபாப் டூ பிளேசிஸ், சாம் கரன், ருத்ராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், லுங்கி இங்கிடி