மும்பை:கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், ஷாகிப் அல் ஹாசன் ஆகிய அனுபவ வீரர்களையும், இளம் வீரர்களான பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இருப்பினும் கடந்த போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் கேகேஆர் போராடி வருகிறது.
வருண், ஹர்பஜன் கூட்டணி பவர்பிளேயில் நெருக்கடி கொடுத்தாலும், அடுத்தடுத்த ஓவர்களில் ரன்களை வாரி வழங்குகின்றது. சிஎஸ்கேவில் டூ பிளேசிஸ், ரெய்னா, மொயின் அலி போன்றோர் சுழற்பந்தை அடிப்பதில் வல்லவர்கள் என்பதால் கேப்டன் மோர்கன் இவர்களை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கொல்கத்தா பேட்டிங்கை பொறுத்தவரை கில், ராணா, திரிபாதி, மோர்கன், ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், ஷாகிப் என வரிசைகட்டி நிற்கின்றனர். இவர்களை செட்டில் ஆக விடாமல் தடுப்பது, சென்னை பவுலர்களுக்கு தலைவலியாக இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்த வெற்றியினால் உற்சாகமாக இருந்தாலும், இன்னும் ஒரு சில ஓட்டைகள் அணியில் உள்ளன. பந்து ஸ்விங் ஆகும்போது மட்டும் தான் தீபக் சாஹரால் விக்கெட் வீழ்த்த முடிகிறது. அதேபோல் தொடக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் ஃபார்மில் இல்லாததால், அது பவர்பிளேயில் சிஎஸ்கேவிற்கு பின்னடவை ஏற்படுத்தி வருகின்றது.