சென்னை: ஐபிஎல் தொடரின் 14ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்பின் களமிறங்கிய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக விளையாடிதால், பஞ்சாப் அணி 120 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தமிழ்நாட்டு வீரர் ஷாருக் கான் 22(17) ரன்களும், மயாங்க் அகர்வால் 22(25) ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
120 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய ஹைதாராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் வார்னர் இணை முதலில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் ஹைதராபாத் அணி 6 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது.
நிதானமாக ஆடி வந்த வார்னர் ஃபேபியன் ஆலன் பந்துவீச்சில் மயாங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். வார்னர் 37 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸர் என 37 ரன்களை எடுத்திருந்தார்.